சிட்டா பறக்கும் Samsung.. Galaxy M47 வந்த சில நாட்களில் இன்னொரு புது 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 (Samsung Galaxy M47) அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, சாம்சங் கேலக்ஸி எம்67 (Samsung Galaxy M67) என்று அழைக்கப்படக்கூடிய புதிய கேலக்ஸி எம் சீரீஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் கீக்பென்ச் (Geekbench) பட்டியலில் வெளியாகியுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸினோஸ் சிப்செட் (Exynos Chipset) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் தெரிய வந்துள்ளன. இதன் மூலம், இது சந்தைக்கு வரும்போது எந்த பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்த ஒரு புரிதலும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்67 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 4என்எம் எக்ஸினோஸ் 2200 ப்ராசஸர்
- 8ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ்
- ஆறு ஆண்டுகளுக்கான மேஜர் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள்
- ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள்
இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரலாம்? கேலக்ஸி எஸ்26 சீரீஸ், கேலக்ஸி Z போல்ட் 7 மற்றும் கேலக்ஸி Z பிளிப் 7 போன்ற தனது உயர்தர ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு கூட சாம்சங் இன்னும் ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், கேலக்ஸி Z போல்ட் 8 சீரிஸ் அறிமுகமான பிறகே கேலக்ஸி எம்67 சந்தைக்கு வரக்கூடும்.
ஏனெனில், தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபோல்டபிள் (foldable) ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்கு முன்பே, புதிய ஆண்ட்ராய்டு பதிப்புடன் கூடிய ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் வெளியிடுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. ஆக ஜூலை 22 அன்று நடைபெறவுள்ள சாம்சங் அன்பேக்டு நிகழ்விற்கு பின்னரே இது அறிமுகமாகும்
விலையை பொறுத்தவரை, இதில் இடம்பெறக்கூடிய ப்ராசஸரை கருத்தில் கொள்ளும்போது, இது முன்னதாக கேலக்ஸி எஸ்22 சீரிஸில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஃபிளாக்ஷிப் சிப்செட் ஆகும். இதன் மூலம், இந்த போன் கேலக்ஸி எம்47 மாடலை விட கணிசமாக உயர்ந்த நிலையில் நிலைநிறுத்தப்படும் என்றும், இதன் விலை ரூ.30,000-ஐ எளிதாகத் தாண்டக்கூடும் என்றும் தெரியவருகிறது.
சமீபத்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் மற்றும் 128GB ஆப்ஷனின் அசல் விலை ரூ.25,999 ஆகும். மேலும் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை ரூ.28,999 ஆகும். இது பிளேஸ் ப்ளூ (Blaze Blue) மற்றும் ரோக் ரெட் (Rogue Red) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 8.5 ஓஎஸ்
- ஆறு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள்
- AI Voice Transcription போன்ற பல்வேறு AI டூல்கள்
- 6.7 அங்குல Full-HD+ Super AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு
- Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட்
- LPDDR5x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ்
- 'பில்' (pill) வடிவ கேமரா யூனிட்டில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- 4K வீடியோக்களை பதிவு செய்யும் ஆதரவு
- ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6,000mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- பைபாஸ் சார்ஜிங்
- கீறல்களை தாங்கும் திறன் (4x scratch resistance)


Click it and Unblock the Notifications