Home
Mobile

மொத்த மார்க்கெட் இதுக்கு காத்திருக்கு.. 8 ஜிபி ரேம், எக்ஸினோஸ் 2200 சிப்.. புது Samsung போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி ஒரு வாரம்தான் முழுசாக முடிந்திருக்கிறது, அதற்குள் புதிய ஸ்மார்ட்போன் மாடலை களமிறக்க சாம்சங் நிறுவனம் ரெடியாகிவிட்டது. ரேம், சிப்செட் மற்றும் ஜிபியு விவரங்கள் மார்க்கெட்டில் கசிந்துள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த எம் சீரிஸ் (M Series) மாடலாக சாம்சங் கேலக்ஸி எம்67 5ஜி (Samsung Galaxy M67 5G) இருக்கப் போகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டெஸ்டிங் வழியாக ரேம், சிப்செட் மற்றும் ஜிபியு விவரங்கள் தெரியவந்துள்ளன. இதை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மொத்த மார்க்கெட் இதுக்கு காத்திருக்கு.. 8 ஜிபி ரேம், எக்ஸினோஸ் 2200!

சாம்சங் கேலக்ஸி எம்67 அம்சங்கள் (Samsung Galaxy M67 Specifications): எக்ஸினோஸ் 2200 (Exynos 2200) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்67 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 920 ஜிபியு (Samsung Xclipse 920 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட உள்ளது. 8 ஜிபி ரேம் கொடுக்க இருக்கிறது.

லேட்டஸ்ட் ஓஎஸ் வெர்ஷனான ஆண்ட்ராய்டு 17 (Android 17) கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. எம் சீர்ஸ் மாடல்களில் கிடைக்கும் கேமரா சிஸ்டம், ஆடியோ மற்றும் ஐபி ரேட்டிங் இதிலும் எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இதில் 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ சூப்பர் அமோலெட் (Infinity-O Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கிடைக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, சாம்சங் கேலக்ஸி எம்67 மாடலில் இன்-ஹவுஸ் சிப்செட் கொடுக்கப்பட இருப்பது தெரிகிறது. இதில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. இந்த கேமரா செட்டப்பை சாம்சங் கேலக்ஸி எம்67 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். 12 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுத்து இருக்கிறது. இதே பேட்டரி சிஸ்டமே சாம்சங் கேலக்ஸி எம்67 ஸ்மார்ட்போனில் கிடைக்க வாய்ப்புள்ளது. பேட்டரி கேபாசிட்டி கொஞ்சம் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் மாறாது. ஏனென்றால், முந்தைய மாடல்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sesnor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. ஆகவே, சாம்சங் கேலக்ஸி எம்67 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M67 With Exynos 2200 Chipset 8GB RAM Specifications Leaked Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X