Home
Mobile

7000எம்ஏஎச் பேட்டரியுடன் விரைவில் களமிறங்கும் கேலக்ஸி எம்62.!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 7000எம்ஏஎச் பேட்டரி, குவாட் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.7-இன்ச் S-AMOLED+ டிஸ்பிளே

6.7-இன்ச் S-AMOLED+ டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் S-AMOLED+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

எக்ஸிநோஸ் 9825 சிப்செட்

எக்ஸிநோஸ் 9825 சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில மிகவும் எதிர்பார்த்த 7என்எம் எக்ஸிநோஸ் 9825 சிப்செட் உடன் மாலி ஜி76 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன்.

6ஜிபி/8ஜிபி ரேம்

6ஜிபி/8ஜிபி ரேம்

சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

சாம்சங் கேலக்ஸி எம்62 பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி செகன்டரி கேமரா + 5எம்பி டெப்த் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ
லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

7000 எம்ஏஎச் பேட்டரி

7000 எம்ஏஎச் பேட்டரி

இந்த சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஜிகாஹெர்ட்ஸ், 5.1

4 ஜி எல்டிஇ, வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 5.1 ஜிகாஹெர்ட்ஸ், 5.8 ஜிகாஹெர்ட்ஸ், புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டு சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M62 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X