Home
Mobile

கேலக்ஸி எம் தொடரில் அடுத்த ஸ்மார்ட்போன் இதுவா?-சாம்சங் கேலக்ஸி எம் 62!

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து அடுத்த எம் சீரிஸ் தொடரில் எம் 62 என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்போனை நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 64

சாம்சங் கேலக்ஸி எம் 64

சாம்சங் கேலக்ஸி எம் 64 ஸ்மார்ட்போன், கேலக்ஸி எம் தொடரின் ப்ரீமியம் ரக மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வரும் எனவும் SM-M625F என்ற எண்ணுடன் சாம்சங் கேலக்ஸி எம்62 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கேலக்ஸி எம் 40

கேலக்ஸி எம் 40

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸில் கடந்த 2019 ஆம் ஆண்டில் கேலக்ஸி எம் 40 சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தாண்டு எம் 51 மாடலை நிறுவனம் அறிமுகம் செய்தது.

7000 எம்ஏஎச் பேட்டரி

7000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம் 62 ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஎச் பேட்டரியுன் அறிமுகமாகும் எனவும் இதில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்62, எம் தொடரில் அடுத்த சக்திவாய்ந்த மாடலாக இருக்கலாம்.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

இந்தாண்டு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்51 குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. கண்டிப்பாக இதன் டிஸ்பிளே அனைவருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம்.

பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்

பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

7000எம்ஏஎச் பேட்டரி

7000எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M62 May Launch 2021: Here the Expected Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X