7000mAh பேட்டரியுடன் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் மாடலை தாய்லாந்தில் அறிமுபம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்திய உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தாலும், இந்த சாதனத்தின் விலை பற்றிய விவரங்களை அறிவிக்கவில்லை சாம்சங் நிறுவனம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து அமசங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக இந்த கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த மென்பொருள் மற்றும் தரமான பேட்டரி வசதி, அசத்தலான கேமராக்கள் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

1080 x 2400 பிக்சல் தீர்மானம்
சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஸ்-AMOLED+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

எக்ஸிநோஸ் 9825 சிப்செட்
சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 7என்எம் எக்ஸிநோஸ் 9825 சிப்செட் உடன் மாலி ஜி76 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த OneUI 3.1 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி செகன்டரி கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள்அடக்கம்.

7000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை வேண்டாம். மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்62 சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications