Home
Mobile

ஏப்.17 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் சாம்சங் பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித்தூக்கும்படி சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) போன் வெளியாக இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு, அட்வான்ஸ்டு நைட்போட்டோகிராபி போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போனின் வெளியீடு, பீச்சர்கள், விலை மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்55 போனுடனான கம்பாரிசன் ஆகியவற்றை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வரும் ஏப்ரல் 17ஆம் தேதி இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போன் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் செக்மெண்ட்டில் மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட மாடலாக எதிர்பார்க்கலாம். ஏனென்றால், டிஸ்பிளே, கேமரா மற்றும் ஏஐ பீச்சர்களின் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ஏப்.17 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M56 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus) பாதுகாப்பு உள்ளது. ஸ்கார்ட்ச் ரெசிஸ்டன்ட் & ஃபால் எண்டூரன்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

வெறும் 7.22 எம்எம் தடிமன் மற்றும் 180 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்கலாம். ஆன்டி-ஷேக் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (OIS Technology) கிடைக்கிறது.

இந்த கேமராவில் பிக் பிக்சல் டெக்னாலஜி (Big Pixel Technology), லோவ் நாய்ஸ் மோட் (Low Noise Mode), ஏஐ ஐஎஸ்பி (AI ISP) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல அட்வான்ஸ்டு நைட் போட்டோகிராபி (Advanced Night Photography), ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser), இமேஜ் கிளிப்பர் (Image Clipper) போன்ற ஏஐ கேமரா பீச்சரகளையும் கொடுக்கிறது.

எச்டிஆர் (HDR) சப்போர்ட் கொண்ட 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மற்றும் ஓஎஸ் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை இப்போது பார்க்கலாம். இந்த சாம்சங் போனில் எக்ஸினோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி/256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன்யுஐ கிடைக்க இருக்கிறது. கேலக்ஸி எம் சீரிஸ் போன்களில் வழக்கமாக கிடைக்கும் 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இது முந்தைய மாடலில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

முன்னதாக வெளியாக சாம்சங் கேலக்ஸி எம்55 போனில் 7.8 எம்எம் தடிமன் கிடைத்தது. ஆனால், இதில் 7.2 தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல டிஸ்பிளேவுக்கு எம்55 போனில் புரொடெக்சன் இல்லை. ஆனால், இதில் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் கிடைக்கிறது. கேமராவில் ஏஐ பீச்சர்கள் மற்றும் செல்பீ ஷூட்டர் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஓஎஸ் மற்றும் சிப்செட் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்55 போனின் விலை ரூ.26,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த போனும் இதே பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஆரம்ப விலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M56 5G With 50MP Camera To Launch April 17 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X