Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. sAMOLED டிஸ்பிளே.. 6 வருட Android OS அப்டேட்.. Samsung 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், அமோலெட்(AMOLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M56 5G Specifications): 6.7- இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ்(Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரண்டுபோன மார்க்கெட்.. Samsung 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (octa-core Exynos 1480 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் One UI 7 சார்ந்த ஆணட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ டூல்ஸ் (AI tools) வசதியும் இந்த போனில் உள்ளது.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (45W fast charging support) உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போனில் உள்ளன. மேலும் லைட் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போன வாங்க முடியும். பின்பு இந்த போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி அமேசான் (Amazon) மற்றும் சாம்சங் தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M56 5G With 50MP Camera Launched Sale From April 23 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X