பொளக்குது விற்பனை.. ரூ.4,500 ஆஃபரில் Samsung போன்.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்கள் விடவே கூடாத விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. பேங்க் கார்டுகள் இல்லாமலேயே நேரடி விலை குறைப்பில் இந்த சாம்சங் மாடல் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகிய போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 27,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.4,500 விலை குறைப்பு செய்யப்பட்டு, ரூ.23,499 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. இதற்கு பேங்க் கார்டுகள் தேவையில்லை.

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M56 5G Specifications): பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஏஎம்டி எக்ஸ்கிளிஸ்ப் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது. ஆனால், 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது. ஒன் யுஐ 7 (One UI 7) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டு உள்ளது. மெயின் கேமராவில் எப்/1.8 அபெர்சர் கிடைக்கிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் எப்/2.2 அபெர்சர் மற்றும் மேக்ரோ கேமராவில் எப்/2.4 அபெர்சர் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுகாக எப்/2.2 அபெர்சர் கொண்ட 12 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் 2.0 (Super Fast Charge 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 7.2 மிமீ தடிமன் கொண்ட மாடலாக இருக்கிறது. மேலும், 180 கிராம் எடையில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், குளோனாஸ் (GLONASS), என்எப்சி (NFC) கிடைக்கிறது. யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போனை லைட் கிரீன் (Light Green) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், பிளாக் (Black) கலரிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications