Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், எக்ஸிநோஸ் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,910 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M56 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1480 சிப்செட் (octa-core Exynos 1480 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் One UI 7 சார்ந்த ஆணட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் 6.7- இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ டூல்ஸ் (AI tools) வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (45W fast charging support) உள்ளது.

லைட் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போன வாங்க முடியும். பின்பு இந்த போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, 4ஜி எல்டிஇ, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M56 5G is available at 22 percent discount on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X