ஏப்ரல் 17-ல் சம்பவம் இருக்கு.. 50எம்பி கேமரா, 45W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் Samsung 5ஜி போன்! எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய சாம்சங் போன் வரும் ஏப்ரல் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எம்56 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M56 5G Specifications): சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED+) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ்(Corning Gorilla Glass Victus+)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த சாம்சங் போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 10 பிட் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் (10-bit HDR video recording) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.
சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1480 பிராஸசர் (Exynos 1480 processor) உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் எக்ஸிநோஸ் பிராசஸர். மேலும் இந்த போனின் எடை 180 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் பட்ஜெட் விலையில் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications