Home
Mobile

ரூ.4,500 விலை குறைப்பு.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் நடக்கும் சூப்பர் சம்மர் டீலில் (Super Summer Deals) சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி (Samsung Galaxy M56 5G) ஸ்மார்ட்போன் ஆனது நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. எந்த பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இப்போது, அமேசான் சூப்பர் சம்மர் டீலில் சாம்சங் மட்டுமல்லாமல், ரியல்மி, ஐக்யூ, டெக்னோ உள்ளிட்ட பல்வறு பிராண்ட்களில் ஸ்மார்ட்போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு கிடைக்கிறது. இதில் சாம்சங் பிரியர்களை சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் தட்டித்தூக்கி இருக்கிறது. ஏனென்றால், ரூ.4,500 விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.

ரூ.4,500 விலை குறைப்பு.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. 5000mAh பேட்டரி!

இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் ரூ.23,499 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, மார்கெட் விலையில் இருந்து நேரடியாக ரூ.4,500 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, எந்த பேங்க் கார்டுகளும் தேவையில்லை.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.26,499 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.4,500 விலை குறைப்பை இதிலும் பெற்று கொள்ளலாம். இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதை பெற்றால், மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி முக்கிய அம்சங்கள்: 1080 x 2340 பிக்சல்களுடன் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ எச்டிஆர் டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) கிடைக்கிறது.

1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் உள்ளது. லைட் கிரீன் (Light Green) அல்லது பிளாக் (Black) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) என்னும் இன்-ஹவுஸ் சிப்செட்டை கொடுத்துள்ளது. அதேபோல ஏஎம்டி எக்ஸ்கிளிஸ்ப் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) மற்றும் சாம்சங்கின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்தாலும், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கும். மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்படும். சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் 2.0 (Super Fast Charge 2.0) கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. வெறும் 7.2 மிமீ தடிமன் மற்றும் 180 கிராம் எடையை கொடுத்து இருக்கிறது.

எப்/1.8 அபெர்சர், ஓஐஎஸ் டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. எப்/2.2 அபெர்சர் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + எப்/2.4 அபெர்சர் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மேலும், எப்/2.2 அபெர்சருடன் 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டைப் - சி சார்ஜிங் (Type - C Charging Port) போர்ட் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M56 5G Gets Rs 4500 Price Cut in Amazon Super Summer Deals Check Price Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X