Home
Mobile

இந்தியாவுக்கு வரும் புது சாம்சங் 5ஜி போன்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எம்55எஸ்(Samsung Galaxy M55s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போனின் சப்போர்ட் பேஜ் (support page) ஆன்லைனில் கசிந்துள்ளது. எனவே வரும் நாட்களில் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் அம்சங்கள் (Samsung Galaxy M55s Specifications ): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் போன் வெளிவரும். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு வரும் புது சாம்சங் 5ஜி போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

6.67-இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த சாம்சங்ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்(OIS) ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் மற்றும் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். எனவே சிறந்த கேமரா போன் வேண்டும் என நினைக்கும் பயனர்கள் இந்த போனை வாங்குவது நல்லது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போன் வரும் நாட்களில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55s Support Page Live in India: May Launch Soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X