இதுதான் புதிய Samsung 5ஜி போன்.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் (Samsung Galaxy M55s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த புதிய சாம்சங் போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக அதே ட்ரிபிள் கேமராக்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. ஆனால் கேமரா இருக்கும் பகுதியில் மட்டும் தனித்துவமான டிசைன் உள்ளது.
அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் அம்சங்கள் (Samsung Galaxy M55s Specifications ): 6.67-இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் மற்றும் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credit: smartprix


Click it and Unblock the Notifications