Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAhபேட்டரி.. எந்த மாடல்?

இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் பிளஸ் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மெயின் கேமரா, 50 எம்பி செல்பீ ஷூட்டர், 8 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி (Samsung Galaxy M55s 5G) போனானது, இப்போது நம்ப முடியாத கம்மி விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் இந்த சாம்சங் போனின் விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் அமேசான் விற்பனை (Samsung Galaxy M55s 5G Amazon Sale): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுப்பதால், விற்பனை பட்டையை கிளப்பியது. இந்த விற்பனையை மேலும் சூடுபிடிக்க வைக்கும்படி அமேசானில் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா போன்!

அதாவது, ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.17,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த கூப்பன் டிஸ்கவுண்ட்டை பெற எந்தவொரு பேங்க் கார்டுகளும் தேவையில்லை. நேரடியாக விலையில் இருந்து குறைக்கப்படுகிறது. இதனாலேயே ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M55s Specifications): இந்த சாம்சங்கில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6 (One UI 6) மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்கள் எதிர்பார்க்கும் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

நான்கு ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு அவுட்புட் கிடைக்கும்.

இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Video Digital Image Stabilization) டெக்னாலஜி வருகிறது. மேலும், 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 50 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. 2 மெமரி மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. இந்த சாம்சங் எம்55எஸ் போனை தண்டர் பிளாக் (Thunder Black) மற்றும் கோரல் கிரீன் (Coral Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். டூயல் டோனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. 7.8 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55s 5G Sale Under Rs 18000 With Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X