Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி (Samsung Galaxy M55s 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,553 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M55s 5G Specifications ): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் One UI 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 1080 X 2400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. கோரல் கிரீன் (Coral Green) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். டூயல் சிம், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்டிஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55s 5G is available at 42 percent discount on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X