செப்டம்பர் 23 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்..
சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி (Samsung Galaxy M55s 5G) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி கேமரா, 45W சார்ஜிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M55s 5G Specifications ): 6.67-இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் போன் அறிமுகம் செய்யப்படும். 1080 X 2400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Qualcomm Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்(OIS) ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் மற்றும் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். கோரல் கிரீன் ( Coral Green) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய சாம்சங் போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ரூ.20,000-க்குள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications