Home
Mobile

ஏப்.8 காலி.. பட்ஜெட்ல சாம்சங்.. OIS கேமரா.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே, 50 எம்பி நைட்போட்டோகிராபி கேமரா, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எம்55 (Samsung Galaxy M55) போன் அமேசானில் வெளியாக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்55 அம்சங்கள் (Samsung Galaxy M55 Specifications): இந்த போன் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கிறது. ஆனால், அம்சங்கள் பட்டையை கிளப்புகின்றன. 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Plus Infinity-O Display) மாடலாகும்.

ஏப்.8 காலி.. பட்ஜெட்ல சாம்சங்.. OIS கேமரா.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்!

அதுமட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். நைட்போட்டோகிராபி (Nightphotography) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு + 2 எம்பி மேக்ரோ இருக்கிறது.

விவிட் போட்டோகிராபி சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) சப்போர்ட் உள்ளது. ஆகவே, கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக இந்த போனின் வரவேற்பு இருக்கப்போகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் மொபைல் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஏப்.8 காலி.. பட்ஜெட்ல சாம்சங்.. OIS கேமரா.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்!

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் மைக்ரோஎஸ்டி (micro SD) கார்டு சிலாட் மூலம் பெறலாம். ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. 45W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் (Super-fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த எம்55 போனின் கனெக்டிவிட்டி பொறுத்தவரையில், யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது.

வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய சப்போர்ட் உள்ளது. இந்த போனில் லைட் கிரீன் (Light Green) மற்றும் பிளாக் (Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், பிரேசலில் வெளியாகிவிட்டதால், விலை விவரங்கள் கசிந்துவிட்டன. இந்த போனின் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. இதே விலையில், இந்தியாவில் வெளியாகலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55 5G With 50MP Camera Launch April 8 Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X