Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 8GB ரேம்.. Snapdragon சிப்செட்.. வருகிறது சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் வரும் ஜனவரி 17-ம் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது BIS சான்றிதழ் தளத்தில் கேலக்ஸி எம்55 5ஜி போன் காணப்பட்டுள்ளது.

அதாவது BIS சான்றிதழ் தளத்தில் SM-M556B/DS என்ற மாடல் நம்பர உடன் சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது சாம்சங் போன்..

சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M55 5G specifications): ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் (Snapdragon 7 Gen 1 SoC) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போனில் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன் யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 8ஜிபி ரேம், 108எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி : 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ளயுஆழுடுநுனு பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு 2,400 x 1,080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் 5 உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1380 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது சாம்சங் போன்..

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜிஇ டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, என்எப்சிஇயுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்54 5ஜி ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M55 5G Spotted on BIS: India Launch Soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X