Home
Mobile

108எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்பேனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 29-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பின்பு இதன்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. மேலும்தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த
ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2500 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் பச்சை, நீலம் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity-O Super AMOLED + டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா (f/1.8 aperture lens) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட
வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக இருக்கும். பின்பு One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஜி எல்டிஇ, வைஃபை, பு

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 176 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M53 5G With Dimensity 900 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X