Home
Mobile

தரமான சிப்செட் உடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தரமான சிப்செட், அசத்தலான கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்அறிமுகம் செய்யப்படும்

லக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்ப

புதிய சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸமார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்தஸ்மார்ட்போன் இரண்டு வருட OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, Dolby Atmos ஆதரவு, அடாப்டிவ் பவர் சேவிங் டெக்னாலஜி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎ

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy M53 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X