Home
Mobile

செப்டம்பர் 28: இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 28-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி ஒ டிஸ்பிளே வசதி கொண்டு வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்

இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆணட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 64எம்பி பிரைமரி சென்சார்

வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இதன் கேமராக்களை
பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்டஇணைப்பு ஆதரவுகளும் உள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்போன் வெளிவரும். பின்பு இந்த சாதனத்தின் எடை 175 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

கேலக்ஸி எம்22

கேலக்ஸி எம்22

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக்
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்தது. புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11
இயங்குதளம், ஒன்யூஐ 3.1 கஸ்டம் ஸ்கின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்22

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களை இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கேலக்ஸி எம்22
ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி எம்22. கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரவில்லை, அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின்

அதேபோல் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதியை வெளியிடவில்லை சாம்சங் நிறுவனம். விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கருப்பு, வெள்ளை, மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில்வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M52 5G with 64 Mega Pixel Camera Launching in India on September 28: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X