போட்டிக்கு ரெடியா: விரைவில் வரும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி இப்படி தான் இருக்கும்!

|

வரவிருக்கும் பல புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி எம்52 5ஜி சாதனமும் ஒன்று. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி மூலம் இயக்கப்படும் சாம்சங் சாதனமாகும். அமேசான் இந்தியா இணையதளத்தில் செப்டம்பர் 19 அன்று வெளியீட்டு தேதி என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பின் அது நீக்கப்பட்டது. இருப்பினும் வெளியீட்டு தேதி இந்த மாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இ-காமர்ஸ் பட்டியலில் இதன் காப்பு பிரதி எடுக்கப்பட்டது. இதில் அதன் விலை மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டது. ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் தளத்தின் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி சாதனத்தின் முழு அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி விலை விவரம்

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி விலை விவரம்

சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி போலந்தில் உள்ள ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் வலைதளத்தில் காணப்பட்டது. அதேபோல் பட்டியலின் மேல் இடதுபுறத்தில் செங்குத்து வடிவத்தில் கேமரா அமைப்பு இருக்கிறது. மேலும் முன்பக்கமாக மையமாக அமைக்கப்பட்ட பஞ்ச் ஹோல் பேனல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம் 52 5ஜி

கேலக்ஸி எம் 52 5ஜி

கேலக்ஸி எம் 52 5ஜி சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.1,749 ஆக இருக்கிறது. இந்தியாவில் இந்த சாதனத்தின் விலை ரூ.35,000-க்கு கீழ் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விலைப்பிரிவில் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்திய அறிமுகம் விரைவில்

இந்திய அறிமுகம் விரைவில்

கேலக்ஸி எம் 52 5ஜி இந்திய அறிமுகம் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்திற்கு நடக்கும் என காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் அமேசான் தெரிவிக்கப்பட்ட செப்டம்பர் 19-க்கு பதிலாக செப்டம்பர் 20 ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி பல குறிப்பிடத்தக்க மேம்பாடுகளுடன் வரும் என கூறப்படுகிறது. சீன பிராண்ட் சாதனங்களுடன் சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது ப்ரீமியம் மிட் ரேஞ்ச் சாதனமாக இருக்கும். ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம் 52 5ஜி குறித்த பல அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

1080 x 2400 பிக்சல்கள் FHD+ தீர்மானம்

1080 x 2400 பிக்சல்கள் FHD+ தீர்மானம்

1080 x 2400 பிக்சல்கள் FHD+ தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே வசதியை கொண்டிருக்கும் என பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 5 மெகாபிக்சல் மேக்ரோசென்சார் மற்றும் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வரும் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வரும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி

ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி

சாம்சங் அதன் இடைப்பட்ட சலுகைகளாக அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சாரை மேம்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் பட்டியலில் குவால்காம் SM7325 SoC-ஐ குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி செயலியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் அனைத்தும் ப்ரீமியம் ரக அம்சங்களை கொண்டிருக்கிறது. கேலக்ஸி எம் 52 5ஜி சாதனமானது ஒன்பிளஸ் நோர்ட் 2 மற்றும் போக்கோ எஃப் 3 ஜிடி சாதனங்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. செயலி மற்றும் காட்சி அனுபவம் மட்டுமின்றி கேமரா விவரக்குறிப்புகளையும் சாம்சங் மேம்படுத்தி இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M52 5G Smartphone Specs and Price Reveals By New E-Commerce

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X