சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.29,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் அசல் விலை ரூ.31,999-ஆக உள்ளது, ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.26,999-க்கு வாங்க முடியும்.

குறிப்பாக இந்த அசத்தலான சலுகை அக்டோபர் 28 முதல் அக்டோபர் 31 வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி.

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதியுடன் உள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும்; வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம் என பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி,4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி/ ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் எனபல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி எம்52 5ஜி சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிங்கிள் சார்ஜில் 48 மணிநேர டால்க் டைம் அல்லது 20 மணிநேர வீடியோ பிளேபேக் கிடைக்கும். குறிப்பாகஇந்த சாதனத்தின் எடை 173 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications