Home
Mobile

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

இந்தியாவில் சாமசங் நிறுவனம் இன்று (செப்டம்பர் 28) புதிய கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 3-ம் தேதி அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின்

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வெளிவந்துள்ளது. அதேபோல் அமேசான் தளத்தில் இந்த சாதனத்தை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல சலுகைகள் இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

க்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன்இந்தசாதனம் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில்5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் எடை 173 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆக்ஸிலரோமீட்டர், கைரோ சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M52 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X