சாம்சங் கேலக்ஸி எம் 51 விரைவில் அறிமுகம்: கசிந்த அம்சங்கள்!

|

சாம்சங் கேலக்ஸி சரியான இடைவெளியில் கேலக்ஸி ஏ மற்றும் கேலக்ஸி எம் தொடர் ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. சாம்சங் அடுத்த முதன்மை ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் செப்டம்பரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சாதனத்தின் சில தகவல்கள் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் எஃப்சிசி பட்டியல் தகவலின் சில முக்கிய அ்மசங்களை பார்க்கலாம். இந்த சாதனம் மெனி ஆப்ஷன் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளது. இந்த சாதனம் எஸ்எம்-எம்515எஃப் எண் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை சிம் இணைப்பு

இரட்டை சிம் இணைப்பு

இந்த சாதனம் இரட்டை சிம் இணைப்பு கொண்டிருக்கும் அதாவது இரண்டிற்கு தனித்தனி ஐஎம்இஐ எண்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில்

வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில்

சாம்சங் கேலக்ஸி எம்51 ஒரு இபி-டிஏ800 அடாப்டர் மற்றும் 25 வாட்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வருகிறது என அறிக்கை கூறுகிறது. எஃப்சிசி பட்டியலின்படி கேலக்ஸி எம்51 வைஃபை ஏசி, ப்ளூடூத், என்எப்சி மற்றும் 4ஜி எல்டிஇ இணைப்பு ஆதரவு உள்ளிட்டவை இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு EP-DA705BBE வகை இயர்போன்களையும் கொண்டிருக்கிறது.

இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை! வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓஎஸ்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓஎஸ்

எஃப்சிசி சான்றிதழின்படி கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கீக்பெஞ்ச் அறிக்கையின்படி சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் 51, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓஎஸ் மற்றும் 8 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்கும் சாதனத்தின் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் டிஸ்ப்ளே அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்க்ரீன் கைரேகை சென்சார் உள்ளிட்டவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது.

64 எம்பி முதன்மை சென்சார்

64 எம்பி முதன்மை சென்சார்

கேமராக்களின் கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M51 Will Launch Soon Leaked Information and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X