Just In
- 16 min ago
ஏர்டெல் நிறுவனத்தின் Safe Pay அறிமுகம்: பணம் அனுப்ப சரியான வழி.!
- 1 hr ago
ரூ.20,000 இலவசம்: ஐந்தே கேள்விகள் கொண்ட அமேசான் குவிஸ்- பதில்கள் இதோ!
- 2 hrs ago
மார்ச் 31 முதல் சில ஆண்ட்ராய்டு போன்களில் Messages App வேலை செய்யாது.! காரணம் என்ன?
- 13 hrs ago
சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!
Don't Miss
- Automobiles
5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா?
- News
சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை- சிறை நிர்வாகம் தகவல்
- Movies
சொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- Sports
இதுதான் பிளான்.. ரொம்ப ஆசைப்படாதீங்க.. புட்டுபுட்டு வைத்த கம்பீர்.. அப்படியே செய்யும் சிஎஸ்கே!
- Finance
வாரத்தின் இறுதி நாளில் செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?
- Lifestyle
ஆண்களே! உங்களோட 'இந்த' விஷயத்துக்கு கேரட் ரொம்ப நல்லதாம் தெரியுமா?
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
64எம்பி கேமரா வசதியுடன் வெளிவந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.!
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த வடிவமைப்பு, சிறந்த கேமரா வசதி, சிறந்த மென்பொருள் வசதி என பல்வேறு முக்கிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றிக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. கண்டிப்பாக இதன் டிஸ்பிளே அனைவருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் போக்கோ எக்ஸ்2, ரியல்மி எக்ஸ்2 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மென்பொருள் அமைப்பிற்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்., வீட்டில் இருந்துனாலும் ஓகே- பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் கொண்டு வெளிப்புறங்களில் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேசமயம் இரவுகளில் கூட மிகத்துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்க முடியம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இவற்றின் பேட்டரி நன்மை அதிகமாக உதவும்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங்
கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190