சாம்சங் கேலக்ஸி எம்51 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: கிடைத்தது புதிய அப்டேட்?
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன. அதாவது இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளன. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 12 அப்டேட்
அதாவது தற்போது சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு OneUI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது. இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு பயனுள்ள பல சிறப்பு அம்சங்களை கொடுக்கும். சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் முதலில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
பின்பு கடந்த 2021-ம் ஆண்டு இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைத்துவிட்டது. சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பயனர்கள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று இந்த புதிய அப்டேட்-ஐ பெறமுடியும். மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பர் AMOLED டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 420 நிட்ஸ் பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இதே சிப்செட் வசதி போக்கோ எக்ஸ்2, ரியல்மி எக்ஸ்2 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது. அதாவது இந்த சிப்செட்-இன் செயல்திறன் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. இதுதவிர மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்51 சாதனம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அறிமுகமானது.

32எம்பி செல்பீ கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பின்தள்ளும் வகையில் சூப்பர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த சாம்சங்கேலக்ஸி எம்51.

7000எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 7000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்51ஸ்மார்ட்போன். பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனை ரூ.24,990-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications