சரியான வாய்ப்பு: 7000 எம்ஏஎச் பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி எம்51- அதிரடி தள்ளுபடி!
7000 எம்ஏஹெச் பேட்டரியோடு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 51
சாம்சங் பிரபல ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் கவர்ச்சிகரமான தள்ளுபடியில் கிடைக்கிறது. அமேசான் தளத்தின் மூலமாக சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த சாதனம் வாங்கும் போது அமேசான் பேங்க் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.24,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.26,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,000 தள்ளுபடி
இந்த சாதனத்தை வாங்க ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். பழைய தொலைபேசியை பரிமாற்றம் செய்யும்போது அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையாக பயனர்கள் ரூ.10,050 தள்ளுபடி பெறுகிறார்கள். மாதத்திற்கு ரூ.1,272 என்ற இஎம்ஐ சலுகையும் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 51: அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எம் 51 ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ கோர் 2.1 இல் இயங்குகிறது. இந்த சாதனம் 6.7 இன்ச் முழு எச்டி + சூப்பர் அமோலேட் பிளஸ் இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த காட்சி 20: 9 விகித 420 நைட்ஸ் உச்ச பிரகாசத்தையும் கொண்டுள்ளது. காட்சியைப் பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சாம்சங் சாதனத்தில் இரண்டு நானோ சிம் வசதிகளையும் வழங்குகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி எஸ்ஓசி
கேலக்ஸி எம் 51 குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனத்தில் 8 ஜிபி ரேம் உள்ளது. கேலக்ஸி எம் 51 ஆனது 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. கூடுதல் விரிவாக்க சேமிப்பிற்கு 512 ஜிபி வரை விரிவாக்க பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் சாதனம் வருகிறது. சாதனத்தில் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0 ஆகிய வசதிகள் உள்ளது.

குவாட் ரியர் கேமரா
சாதனத்தின் குவாட் ரியர் கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் முதன்மை கேமராவாக 64 மெகாபிக்சலும், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் ஷூட்டர் வசதியும், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். செல்பி கேமராவுக்கு முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

7,000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனில் 7,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கை வசதி உள்ளது. ஸ்மார்ட்போனை 115 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications