சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
சாம்சங் நிறுவனம் ஜெர்மன் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்போக்கோ எக்ஸ்2, ரியல்மி எக்ஸ்2 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக
இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை 360 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 31,400) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications