சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலை ரூ.2000-விலைகுறைப்பில் வாங்க முடியும்.

இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்புக்குப் பிறகு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்51 மாடலை ரூ.22,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்51 மாடலை ரூ.24,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. கண்டிப்பாக இதன் டிஸ்பிளே அனைவருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் போக்கோ எக்ஸ்2, ரியல்மி எக்ஸ்2 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் கொண்டு வெளிப்புறங்களில் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேசமயம் இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்க முடியம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடல்.
Source: timesofindia


Click it and Unblock the Notifications