இன்பதிர்ச்சி கொடுத்த சாம்சங்.. ஆண்ட்ராய்டு 17 OS அப்டேட்.. எந்த ஸ்மார்ட்போனுக்கு தெரியுமா?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனை கடந்த ஜூன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் யுஐ 8.5 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த கேலக்ஸி எம்47 போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கத் தொடங்கி உள்ளது.
அதாவது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 17 (Android 17) அடிப்படையிலான நிலையான ஒன் யுஐ 9 (One UI 9) அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் M476BXXU3BZJ1 என்ற ஃபார்ம்வேர் வெர்ஷனுடன் வருகிறது.

இந்த ஓஎஸ் அப்டேட் மூலம் பல புதிய அம்சங்கள் கேலக்ஸி எம்47 போனுக்கு கிடைத்துள்ளது. அதாவது Quick Panel-ஐ நமக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்ளலாம், brightness மற்றும் volume அளவுகளை மாற்றும் வசதியும், சவுண்ட் மோடுகளை மாற்ற தனி பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், போனை திறக்கும்போது பயோமெட்ரிக் வசதிகளைத் தற்காலிகமாக முடக்கும் Quick Lock, லொகேஷனை எந்த ஆப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டும் நீல நிறக் குறியீடு, Settings-ல் Warranty and Care மெனு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய அப்டேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Qualcomm's Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையி அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ், 1080×2340 பிக்சல்ஸ், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) போன்ற பல சிறப்பான வசதிகள் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், குளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனில் உள்ளன. ரோக் ரெட் மற்றும் பிளேஸ் ப்ளூ நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications
