Home
Mobile

சாம்சங் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் நிறுவனம் இன்று இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை தேதி ஆகிய விவரங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ், 1080×2340 பிக்சல்ஸ், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

சாம்சங் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Qualcomm's Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையி அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன்சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) போன்ற பல சிறப்பான வசதிகள் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

சாம்சங் அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், குளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனில் உள்ளன.

ரோக் ரெட் மற்றும் பிளேஸ் ப்ளூ நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை 4 ஆம் தேதி அமேசான் தளத்தில் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.22,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 5G With 6000mAh battery launched india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X