Home
Mobile

வாங்குனா இப்படி வாங்கனும்.. BYBASS சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 6 OS அப்டேட்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படியான பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பைபாஸ் சார்ஜிங் கொண்ட மாடலாக இருப்பதால், கேமிங் பிரியர்களும் இதன் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றனர்.

சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், டிரிபிள் ரியர் கேமராவையும் கொடுக்கும் மாடல்களாக இந்த சீரிஸ் இருக்கிறது. இதில் புதிய வரவாக சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 29ஆம் தேதி களமிறங்க இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

வாங்குனா இப்படி வாங்கனும்.. BYBASS சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

பிரீமியம் டிசைன் கொண்ட பட்ஜெட் மாடலாக இருப்பது போஸ்டரை பார்த்தாலோ தெரிகிறது. பீச்சர்களும் முந்தைய மாடல்களை தூக்கி சாப்பிடும்படி இருக்கின்றன. டியூரபிலிட்டி மற்றும் பர்ஃபாமென்ஸ் பக்கம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுவிட்டன.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G Specifications): ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவை கொடுத்துள்ளது.

12 எம்பி எச்டிஆர் செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. இந்த கேமராவுக்கு ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser), மை ஃபில்டர் (My Filter), எடிட் சஜஷன் (Edit Suggestion) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பிரைவட் ஆல்பம் (Private Album) கிடைக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி கிடைக்க இருக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Vcitus+) புரொடெக்சனை கொடுக்கிறது. 4X ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 2 மீட்டர்கள் ஃபால் (Fall) ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த டிஸ்பிளே இருக்கிறது.

லாங் லாஸ்டிங் பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. கேமிங் பிரியர்கள் விரும்பும்படி பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. க்நாக்ஸ் செக்யூரிட்டி கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

ரோக் ரெட் (Rogue Red) மற்றும் பிளேஸ் ப்ளூ (Blaze Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் (Octa Core Snapdragon) சிப்செட் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ கிடைக்கிறது. நவ் பார் (Now Bar), லைவ் நோட்டிபிகேஷன் (Live Notification), குயிக் ஷேர் (Quick Share) உள்ளது.

மேலும், வாய்ஸ் போகஸ் (Voice Focus) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் (AI Voice Trancription) கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்க இருக்கிறது. இதனாலேயே சாம்சங் கஸ்டமர்கள் வெளியீட்டுக்கு வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 5G With 6 Gen OS Upgrades Launching in India on June 29 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X