Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Samsung 5ஜி போன்.. 6 ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் நிறுவனம் நாளை (ஜூன் 29) இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Qualcomm's Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Samsung 5ஜி போன்..  எந்த மாடல்?

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

குறிப்பாக One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் போன் வெளியாகும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.

நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது Samsung 5ஜி போன்..  எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000-க்கு கீழ் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X