ஒரே விலைக்கு 2 போன்கள்.. OnePlus N6 5G vs Samsung Galaxy M47 5G.. எது பெஸ்ட்? எதை நம்பி வாங்கலாம்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி எம்47 5ஜி (Galaxy M47 5G) மாடலும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் என்ட்ரி-லெவல் (Entry-level) ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் என்6 5ஜி (OnePlus N6 5G) மாடலும் ஒரே விலைக்கு - அதாவது ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
OnePlus N6 5G vs Samsung Galaxy M47 5G: இவ்விரு ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்? எதை நம்பி வாங்கலாம்? ஏன் நம்பி வாங்கலாம்? முதலில் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனை பார்த்தால், இதில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.7-இன்ச் எப்எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளது.

பாதுகாப்பிற்காக இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், ஒன்பிளஸ் என்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்க்ரீன் அதிகபட்சமாக 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ்-ஐ ஆதரிக்கிறது.
செயல்திறனை பொறுத்தவரை, கேலக்ஸி எம்47 5ஜி ஆனது நடுத்தர ரக போன்களுக்கான நவீன 4என்எம் தொழில்நுட்பத்திலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதன் போட்டியாளரான ஒன்பிளஸ் என்6 5ஜி ஆனது 6என்எம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்டை கொண்டுள்ளது.
மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ்-ன் AnTuTu ஸ்கோர் 6,15,800-க்கும் அதிகமாக உள்ளது; அதே சமயம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3-ன் ஸ்கோர் 8,68,000 ஆகும். இதன் 4என்எம் கட்டமைப்பு சிறந்த செயல்திறனையும் வேகத்தையும் வழங்குகிறது. வேகமான சிப்செட்டுடன், கேலக்ஸி எம்47 5ஜி ஆனது LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இவை தடையற்ற பயனர் அனுபவத்தை உறுதி செய்கின்றன.
ஒன்பிளஸ்-ஐ பொறுத்தவரை, அதன் ரேம் மற்றும் சேமிப்பு வகைகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இங்கே ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஆனது சில மென்பொருள் மேம்பாடுகள் (Software optimizations) மூலம், 60 மாதங்கள் வரை சீரான செயல்பாட்டை வழங்கும் என்று ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.
சாம்சங் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 'பைபாஸ் சார்ஜிங்' (Bypass charging) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழில்நுட்பம் மின்சாரத்தை நேரடியாக மதர்போர்டுக்கு செலுத்துவதன் மூலம் பேட்டரி சுழற்சிகளை (battery cycles) குறைத்து, பேட்டரியின் நீண்டகால ஆயுளை மேம்படுத்துகிறது. நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மேலும், போன் சூடாகாமல் இருக்க சாம்சங் இதில் வெப்ப மேலாண்மை வசதிகளையும் (thermal benefits) வழங்குகிறது. கேமிங் செயல்திறனில் ஒன்பிளஸ் என்5 ஸ்மார்ட்போனும் சளைத்ததல்ல; இதில் பிரத்யேக 'வேப்பர் சேம்பர்' (Vapor chamber) உள்ளது. இது சுமார் 5300மிமீ அளவுடன், "இந்தப் பிரிவிலேயே மிகப்பெரியவற்றில் ஒன்று" என்று ஒன்பிளஸ் கூறுகிறது. 8,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி மற்றும் 45W வயர்டு சார்ஜிங் வசதியுடன் ஒன்பிளஸ் முன்னிலையும் வகிக்கிறது. சுமார் 3 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளையும், 7 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரி ஆரோக்கியத்தையும் ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் மாடலானது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது: OIS வசதியுடன் கூடிய 50MP முதன்மை சென்சார், 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைமரி ரியர் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் உள்ளன; முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா உள்ளது
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனிற்கு எந்தவொரு IP மதிப்பீடு அல்லது பாதுகாப்பு விவரங்களையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஒன்பிளஸ் நிறுவனமானது MIL-STD-810H தரநிலையின் கீழ் 'மிலிட்டரி கிரேடு' (Military Grade) பாதுகாப்பையும் IP65 மதிப்பீட்டையும் அதன் ஒன்பிளஸ் என்6 மாடலுக்கு வழங்குகிறது.
சாஃப்ட்வேரை பொறுத்தவரை, சாம்சங் தனது எம்47 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான One UI 8.5-ஐ வழங்குகிறது. இதற்கு 6 முக்கிய ஆண்ட் ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான செக்யூரிட்டி பேட்ச்களும் (security patches) கிடைக்கும். மறுபுறம், ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான லேட்டஸ்ட் OxygenOS 16.0-ஐகொண்டுள்ளது. இதற்கு 2 முக்கிய ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும்.
முடிவு - OnePlus Nord N6 5G vs Samsung Galaxy M47 5G: எது சிறந்த போன்? இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெரும்பாலான தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்பிளஸ் என்6 5ஜி மாடலை விட சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி முன்னிலையில் இருப்பது தெளிவாகிறது. டிஸ்பிளேவிலும் சரி, செயல்திறனிலும் சரி, கேமராவிலும் சரி, ஓஎஸ் அப்டேட்களிலும் சரி - சாம்சங் நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தை விட முன்னிலையில் உள்ளது வெளிப்படை!


Click it and Unblock the Notifications