Home
Mobile

Samsung களமிறக்கும் புதிய 5ஜி போன்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் நீண்ட வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட், தரமான சிப்செட் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது அமேசான் தளத்தில் இந்த போனின் டீசர் வெளியாகி உள்ளது. ஆகவே வரும் நாட்களில் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனின் விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

Samsung களமிறக்கும் புதிய 5ஜி போன்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 3 சிப்செட் ( Qualcomm's Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.7-இன்ச் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் போன் வெளியாகும் தகவல்கள் கசிந்துள்ளது.

Samsung களமிறக்கும் புதிய 5ஜி போன்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி அல்லது 7000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000-க்கு கீழ் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 5G teaser released in India: check Expected specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X