Home
Mobile

WORST-ரா.. ரூ.8000 விலை உயர்வு.. மக்களே புது போன் வாங்குற ஐடியா இருந்தா உடனே வாங்கிடுங்க!

நடந்து கொண்டிருக்கும் ஸ்மார்போன் விலை உயர்வு ஆனது இதைவிட மோசமான சூழ்நிலையை சந்திக்காது. ஜூன் 29 அன்று அறிமுகமாகி, ஜூலை 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்த ஒரு லேட்டஸ்ட் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.8000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அது சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இதன் பேஸிக் 6GB/128GB வேரியண்ட் ஆனது ரூ.25,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக சலுகையின் மூலம் இதன் விலை ரூ. 22,999 ஆக குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே மாடல் இப்போது அமேசான் இந்தியாவில் (Amazon India) ரூ.32,999 க்கு விற்கப்படுகிறது. அதாவது இதன் விலை ரூ.7,000 அதிகரித்துள்ளது.

மக்களே புது போன் வாங்குற ஐடியா இருந்தா உடனே வாங்கிடுங்க!

மற்ற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலையிலும் இதேபோன்ற உயர்வு காணப்படுகிறது. ரூ.25,999 (சலுகை விலையில்) அறிமுகமான 8GB/128GB மாடல், இப்போது ரூ.36,999-க்கு விற்கப்படுகிறது. ரூ.30,999 க்கு அறிமுகமான ஹை-எண்ட் 8GB/256GB மாடல், தற்போது ரூ.41,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களின் விலையும் அறிமுக வாரத்தில் இருந்த விலையை விட ரூ.8,000 அதிகமாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி-க்கான விலை உயர்வுக்கான காரணம் புரியவில்லை: இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலைகள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றன தான்; இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த ஓராண்டில் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பல மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளன.

மெமரி உதிரிபாகங்களின் விலை உயர்வை ஈடுகட்ட நத்திங் (Nothing), ரியல்மி (Realme) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தி வருகின்றன. மெமரி உதிரிபாகங்களின் விலை உயர்வதற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட போன்களை பொறுத்தவரை இந்த விலை உயர்வு நியாயமானதாகவே தோன்றுகிறது; ஏனெனில், நிறுவனங்கள் ஆரம்பத்தில் திட்டமிடாத கூடுதல் செலவுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.. ஆனால், வெறும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு போனுக்கு சாம்சங் இப்போது அதே செயலை செய்வதுதான் முரணாக தோன்றுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான OneUI 8.5 ஓஎஸ்
- ஆறு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள்
- AI Voice Transcription போன்ற பல்வேறு AI டூல்கள்
- 6.7 அங்குல Full-HD+ Super AMOLED டிஸ்பிளே
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்

- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு
- Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட்
- LPDDR5x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ்
- 'பில்' (pill) வடிவ கேமரா யூனிட்டில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்

- 4K வீடியோக்களை பதிவு செய்யும் ஆதரவு
- ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6,000mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- பைபாஸ் சார்ஜிங்
- கீறல்களை தாங்கும் திறன் (4x scratch resistance)
- 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் தாங்கும் திறன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன் (ஐபி ரேட்டிங் குறிப்பிடப்படவில்லை)

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M47 5G Price Hiked Up to Rs 8000 smartphone price hike goes worst
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X