அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. ஆண்ட்ராய்டு 16 ஒஎஸ்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்த இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) எனும் போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலைக்குத் தகுந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 3 சிப்செட் ( Qualcomm's Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
அதேபோல் One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் 6.7-இன்ச் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் போன் வெளியாகும் தகவல்கள் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி அல்லது 7000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications