ஜூன் 29-க்கு அப்புறம் இதுதான்.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது Samsung ஸ்மார்ட்போன்!
பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களை ஜூன் 29ஆம் தேதி வரையில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் வெயிட் செய்ய வைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு, எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது. விலை எப்படி இருக்கும்?
டிசைன் மற்றும் டியூரபிலிட்டியில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கட்டாயம் பட்டையை கிளப்ப இருக்கிறது. ஏனென்றால், டூயல் டோன் கொடுக்கும்படி பேக் பேனல் ஒரு கலரிலும் மிடில் ஃபிரேம் ஒரு கலரிலும் இருக்கிறது. மிடில் ஃபிரேம் மெட்டாலிக் பினிஷிங் கொடுக்கிறது. ரோக் ரெட் (Rogue Red) மற்றும் பிளேஸ் ப்ளூ (Blaze Blue) கலர்கள் வருகின்றன.

டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. டியூரபிலிட்டி பக்கம் பார்க்கையில், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Vcitus+) புரொடெக்சனை பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4X ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் (Scratch Resistant) கொடுக்கிறது.
மேலும், 2 மீட்டர்கள் ஃபால் (Fall) ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, கைகளில் இருந்து கீழே விருந்தாலும் தாக்குப்பிடிக்கும்படியான பாடியை கொடுத்துள்ளது. மேலும், வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) கொடுக்கும் மாடலாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. இதில் நவ் பார் (Now Bar), லைவ் நோட்டிபிகேஷன் (Live Notification), ஹோம் ஸ்கிரீன் பர்சனலைசேஷன் (Home Screen Personalization), வாய்ஸ் போகஸ் (Voice Focus) மற்றும் குயிக் ஷேர் (Quick Share) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் (AI Voice Trancription) உள்ளது. கேமராவுக்கும் ஏஐ பீச்சர்கள் உள்ளன.
ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser), மை ஃபில்டர் (My Filter) மற்றும் எடிட் சஜஷன் (Edit Suggestion) உள்ளிட்ட ஏஐ இன்டிகிரேஷன் பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், சர்க்கிள் டூ சர்ச், சாம்சங் வாலெட், சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி கிடைக்க இருக்கிறது. மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M47 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பஞ்ச்-ஹோல் டிசைனில் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. எச்டிஆர் (HDR) சப்போர்ட் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் பேட்டரி கேபாசிட்டி உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், இது எம் சீரிஸ் மாடலாக இருப்பதால், 5000mAh பேட்டரிக்கும் மேல் எதிர்பார்க்கலாம். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும். ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications