Home
Mobile

வேற லெவல் 5ஜி போனை களமிறக்கும் சாம்சங்.. Snapdragon சிப்செட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் SIG சான்றிதழ் தளத்தில் SM-M446K என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டது. எனவே விரைவில் இந்த போன் உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி, ட்ரிபிள் ரியர் கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வேற லெவல் 5ஜி போனை களமிறக்கும் சாம்சங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்44 (Samsung Galaxy M44) ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் (Snapdragon 888) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான சாம்சங் போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது மைக்ரோ எஸ்டி (microSD card) கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி வரை மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

வேற லெவல் 5ஜி போனை களமிறக்கும் சாம்சங்.. எந்த மாடல்?

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ( fingerprint sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான கேலக்ஸி எம்44 போன் வெளிவரும்.

5ஜி, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், வைஃபை 802.11, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M44 specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X