Home
Mobile

வந்தா வாரி தூக்குவீங்க.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 128ஜிபி மெமரி.. புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது கேலக்ஸி எம்44 5ஜி போன் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் புளூடூத் SIG சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி (Samsung Galaxy M44 5G) ஸ்மார்ட்போன். மேலும் SM-M446K எனும் மால் நம்பரை கொண்டு இந்த புது சாம்சங் போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

வந்தா வாரி தூக்குவீங்க.. புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

அதாவது சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கேலக்ஸி எம்44 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.2, அட்ரினோ 660 ஜிபியு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எம்44 5ஜி போன் அறிமுகமாகும்.

தற்போது சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த கேலக்ஸி எம்44 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது பெரும்பாலான சாம்சங் போன்களில் உள்ள "பாரம்பரிய வடிவமைப்பான" இன்ஃபினிட்டி யு (Infinity U) டிசனையும் பெற்றுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி எம்34 5ஜி ஆனது ஓஐஎஸ் (OIS0 ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் அல்லது மேக்ரோ சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனில் ஃபன் மோட் (Fun mode) மற்றும் நைட்டோகிராஃபி (Nightography) போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன. சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

வந்தா வாரி தூக்குவீங்க.. புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போன் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M44 5G with Snapdragon 888 chipset will be launched soon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X