Home
Mobile

6ஜிபி ரேம்.. 64எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி போன் பட்ஜெட் விலையில்.. எல்லாரும் வாங்கிக்கலாம் போலையே!

விவோ, ஒன்பிளஸ், ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடர்ந்து அதிநவீன 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் சாம்சங் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தரமான அம்சங்களுடன் சாம்சங் போன்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த கேலக்ஸி எம்44 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கீக்பெஞ்ச் (Geekbench)இணையதளத்தில் வெளியாக உள்ளது. மேலும் அந்த இணையதளத்தில் வெளியான தகவலை இப்போது பார்ப்போம்.

6ஜிபி ரேம்.. 64எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி போன் பட்ஜெட் விலையில்.!

அதாவது சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி (Samsung Galaxy M44 5G) ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 (Qualcomm Snapdragon 888) சிப்செட் உடன் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் கேமிங் வசதிக்குத் தகுந்தபடி தனித்துவமான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக கேலக்ஸி எம்44 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்44 5ஜி போன் ஆனது 64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கேலக்ஸி எம்44 5ஜி போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த மாதம் தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது சாம்சங்.

இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உடனான டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். பின்பு இந்த போன் பாரம்பரிய வடிவமைப்பான" இன்ஃபினிட்டி யு (Infinity U) டிசனையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கேலக்ஸி எம்34 5ஜி ஆனது ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் அல்லது மேக்ரோ சென்சாரும் உள்ளது. மேலும் இதன் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

6ஜிபி ரேம்.. 64எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி போன் பட்ஜெட் விலையில்.!

எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் இயக்கப்படுகிறது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி. பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.17,999-ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M44 5G with Snapdragon 888, 6GB RAM chipset to be launched in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X