பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் நிறவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் 5ஜி சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்

கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளன, அதைப் பற்றி சற்று விரிவாகாப் பார்ப்போம்.

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே

கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் எச்டி பிளஸ் AMOLED இன்பினிட்டி யு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!

ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்

இந்த கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 48எம்பி பிரைமரி சென்சா

48எம்பி பிரைமரி சென்சா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ரூ. 8,999 விலையில் Samsung Galaxy F02s இன்று விற்பனை.. மலிவு விலையில் தரமான போன் வாங்க உடனே முந்துங்கள்..ரூ. 8,999 விலையில் Samsung Galaxy F02s இன்று விற்பனை.. மலிவு விலையில் தரமான போன் வாங்க உடனே முந்துங்கள்..

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெரும். பின்பு 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

LG போன் வணிக பணிநிறுத்தம் நடந்தாலும் பயனர்களை கைவிட மாட்டோம்.. LG கொடுத்த 3 ஆண்டு சேவை உறுதி..LG போன் வணிக பணிநிறுத்தம் நடந்தாலும் பயனர்களை கைவிட மாட்டோம்.. LG கொடுத்த 3 ஆண்டு சேவை உறுதி..

கேலக்ஸி எம்42 5ஜி  ஸ்மார்ட்போன் மா

இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M42 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X