மிட் ரேஞ் செக்மென்ட் விலையில் புது சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை இதுவாக இருக்கலாம்..
சாம்சங் தனது முதல் மிட் செக்மென்ட் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. சாம்சங் நிறுவனம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 42 என்ற புதிய சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெளியான சாம்சங் கேலக்ஸி எம் 12, சாம்சங் கேலக்ஸி எம் 02 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு, இந்த 2021 ஆம் ஆண்டில் வெளியாகும் அடுத்த சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாகும்.

சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி
இது சாம்சங்கின் நான்காவது எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 42 சாதனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் மிக் ரேஞ் செக்மென்ட் விலை பிரிவின் கீழ் வெளிவரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அமேசான் இந்தியா மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும். ஏனெனில் இ-காமர்ஸ் வலைத்தளம் ஏற்கனவே சாதனத்தின் அறிமுகத்தைத் தனது பக்கத்தில் டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.

புதிதாக சாம்சங் பே வசதி
5 ஜி திறனுடன்,வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனில் புதிதாக சாம்சங் பே வசதியை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சாம்சங் பே அம்சத்துடன் வெளிவரும் முதல் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போன் இருக்கும். நாக்ஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்கப்பட்ட இந்த தயாரிப்பு கூடுதல் டிபென்ஸ் கிரேடு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், இது மால்வேர் மற்றும் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து நுகர்வோரின் மிக முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விலை என்ன இருக்கும்?
சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி விலை இந்தியாவில் ரூ .20,000 முதல் ரூ .25,000 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வகைகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன் சாதனம் 64 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவுடன் வருவதாக கூறப்படுகிறது. இது 6.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்று தெரிகிறது.

6,000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஏ 42 5 ஜி இன் டவுன் வெர்ஷன் பதிப்பாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. புதிய சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 6,000 எம்ஏஎச் வழக்கமான திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் இயங்கும் இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications