Samsung Galaxy M42 5G போனை வெறும் ரூ.19,999 சலுகை விலையில் வாங்க ரெடியா? உடனே முந்துங்கள்..
சாம்சங் தனது முதல் மிட் செக்மென்ட் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி (இன்று) இந்தியாவில் தனது சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி (Samsung Galaxy M42 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெளியான சாம்சங் கேலக்ஸி எம் 12, சாம்சங் கேலக்ஸி எம் 02 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பிறகு, இந்த 2021 ஆம் ஆண்டில் வெளியாகும் அடுத்த சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாகும்.

மிட் ரேஞ் செக்மென்ட் விலையில் புதிய சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி
இது சாம்சங்கின் நான்காவது எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 42 சாதனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் மிட் ரேஞ் செக்மென்ட் விலை பிரிவின் கீழ் நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் நிறுவனத்தினை அதிகாரப்பூர்வ ஆன்லைன் பக்கம் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும். இ-காமர்ஸ் வலைத்தளம் ஏற்கனவே இந்த சாதனத்தின் அறிமுகத்தைத் தனது பக்கத்தில் டீஸ் செய்யத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஜி திறனுடன் நுகர்வோரின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் புதிய சாதனம்
5 ஜி திறனுடன்,வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனில் புதிதாக சாம்சங் பே வசதியை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சாம்சங் பே அம்சத்துடன் வெளிவரும் முதல் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போன் இருக்கும். நாக்ஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்கப்பட்ட இந்த தயாரிப்பு கூடுதல் டிபென்ஸ் கிரேடு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், இது மால்வேர் மற்றும் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து நுகர்வோரின் மிக முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை
சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மிட் ரேஞ் செக்மென்ட்டில் தான் இருக்கும் என்று நிறுவனம் முன்பே கூறியிருந்தது. அதேபோல், Samsung Galaxy M42 5G போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் இப்போது ரூ .21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் இப்போது இந்தியாவில் வெறும் ரூ. 23,999 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது ப்ரிஸம் டாட் பிளாக், பிரிசம் டாட் கிரே மற்றும் ப்ரிஸம் டாட் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இப்போது 'இந்த' விலையில்
புதிய சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக, இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இப்போது வெறும் ரூ .19,999 என்ற விலையில் குறுகிய காலத்திற்கு மட்டும் கிடைக்கிறது. அதேபோல், இதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ .21,999 என்ற விலையில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 6.6 இன்ச் எச்டி + சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samsung Galaxy M42 5G சிறப்பம்சம்
இது இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனருக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 2.2GHz வேகத்தைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் 6ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்ஜை விரிவாக்கக்கூடிய வசதியும் உள்ளது. இந்த சாதனம் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

கேமரா மற்றும் இணைப்பு அம்சங்கள்
இது 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சார் உடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி கேமராவை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 42 5 ஜி ஸ்மார்ட்போன் 15W அதிகபட்ச சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கிறது. இது UI 3.1 உடன் Android 11 இல் இயங்கும் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற அம்சங்களும் உள்ளது.


Click it and Unblock the Notifications