விரைவில் இரண்டு சாம்சங் கேலக்ஸி 5ஜி சாதனங்கள் இந்தியாவில்!
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ42 5ஜி இந்திய தர நிர்ணய பணியகத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. கேலக்ஸி எம்42 5ஜி இதுவரை எந்த சந்தையிலும் அறிமுகம் செய்யப்படவில்லை. கேலக்ஸி ஏ42 5ஜி செப்டம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் ஏ மற்றும் எம் தொடரில் இருக்கும் இந்த 5ஜி சாதனங்கள் விரைவில் சந்தைக்கு வரும் என பட்டியல் தெரிவிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ42 5ஜி
மைஸ்மார்ட்பிரைஸ் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எம் 42 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ42 5ஜி பிஐஎஸ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் இரட்டை சிம் ஆதரவு மற்றும் மாடல் எண்களை தவிர வேறு விவரங்கள் பட்டியலில் தெளிவாக தெரியவில்லை. சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் M426b/DS ஆகவும், சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி எஸ்எம்-ஏ426பி/டிஎஸ் மாடல் எண் உடன் பட்டியலில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

5ஜி ஆதரவோடு வரும் முதல் கேலக்ஸி எம் சீரிஸ்
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி தொடர் ஸ்மார்ட்போனை வைஃபை இணைப்பு, ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றிதழ் வலைதளத்தில் காணப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 42 5ஜி இந்தியாவில் 5ஜி ஆதரவோடு வரும் முதல் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் சில சந்தைகளில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி மூலம் இயக்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவையுடன் வருகிறது. அதேபோல் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி மற்றும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது எனவே இந்த சாதனம் விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி இந்தியா வெளியீடு மார்ச் 30 ஆம் தேதிக்கு அமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் ட்விட்டரில் ஒரு பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தஸ்மார்ட் போனின் பதிவு பக்கம் சாம்சங் இந்தியா இணையதளத்தில் 'Notify me' பட்டனை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் 4 ஜி மற்றும் 5 ஜி வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் 4 ஜி மாறுபாடு மட்டுமே அக்டோபரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகம் அன்றே விற்பனை
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி இந்தியாவில் ஸ்னாப்டிராகன் செயலியுடன் அறிமுகம் செய்யப்படும், இது 4 ஜி வேரியண்ட்டைப் போலல்லாமல் எக்ஸினோஸ் 990 சிப்செட் உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி S20 FE 5G செவ்வாய்க்கிழமை, மார்ச் 30 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மற்றும் அதே நாளில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








