சலுகையுடன் விற்பனைக்குக் களமிறங்கும் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனம் அதன் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்த புதுவரவு மாடலான சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலின் முதல் துவக்க விற்பனையை, சாம்சங் நிறுவனம் அமேசான் தளம் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் துவங்குகிறது.

சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் நான்காவது அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபினிட்டி-ஓ பஞ்ச் ஹோல் டிஸ்பிளே
இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளே கொண்ட பஞ்ச் ஹோல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா சேவையுடன் கூடிய 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்40 விற்பனை விபரம்
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.19,990 என்ற விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்வீட்டர் ப்ளூ என்று இரண்டு நிறத்தில் விற்பனைக்கு இன்று முதல் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ சலுகை
துவக்க விற்பனையின் சலுகையாக ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.198 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் கூடுதல் இரட்டிப்பு டேட்டா சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் சலுகை
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 திட்டத்தின் கீழ் தொடர்ந்து அடுத்த 10 மாதங்களுக்குக் கூடுதல் இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா சலுகை
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வாங்கும் வோடபோன் மற்றும் ஐடியா பயனர்களுக்கு ரூ.3,750 வரையிலான கேஷ் பேக் சலுகை ரூ.255 திட்டத்துடன் 18 மாத காலத்திற்கு 0.5 ஜிபி டேட்டாவுடன் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே
- டிஸ்பிளே பேனல் ஸ்கிரீன் சவுண்ட் தொழில்நுட்பம்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 ஜிபியூ
- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- எஸ்.டி கார்டு மூலம் 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு
- சாம்சங் ஒன் யூ.ஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 32 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா
- டால்பி அட்மாஸ்
- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- டூயல் 4ஜி சிம்
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- வைஃபை
- ப்ளூடூத்
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்30
அதேபோல் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில்அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். பட்ஜெட் விலையில் உங்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் தேர்வாக சாம்சங் கேலக்ஸி எம்30 இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


Click it and Unblock the Notifications