பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்.!
இதுவரை பிளாஷ் சேலில் மட்டும் விற்பனைக்கு வந்த கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், தற்போது ஓபன் சேலாக வந்துள்ளது, எனவே எப்போதுவேண்டுமானாலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே
இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே கொண்ட பஞ்ச் ஹோல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா+5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா + 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என மூன்று கேமரா உள்ளது. பின்பு 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எம்40 விற்பனை விபரம்
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ.19,990 என்ற விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்வீட்டர் ப்ளூ என்று இரண்டு நிறத்தில் விற்பனைக்கு இன்று முதல் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications