சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆஃப்லைன் ஸ்டோர்களில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,290-விலையில் விலையில் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இருந்தபோதிலும அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை, இப்போது சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பஞ்ச் ஹோல் கேமராவுடன் இன்ஃபினிட்டி டிஸ்பிளே
இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், 6.39' இன்ச் முழு எச்.டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ.எல்.சி.டி டிஸ்பிளே கொண்ட பஞ்ச் ஹோல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா+5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா + 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என மூன்று கேமரா உள்ளது. பின்பு 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க பஞ்ச் ஹோல் செல்ஃபீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்


Click it and Unblock the Notifications