கொஞ்சம் பொறுங்க.. ஆண்ட்ராய்டு 15.. 6ஜிபி ரேம்.. இந்தியாவுக்கு வரும் புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்36 (Samsung Galaxy M36) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது அமேசான் தளத்தில் இந்த கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி உள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எம்36 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 6ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவரும். தற்போது இந்த கேலக்ஸி எம்36 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அம்சங்களும் வெளியாகும். மேலும் கடந்த ஆண்டு அறிமகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன். 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), டேய்பிரேக் ப்ளூ (Daybreak Blue), தண்டர் கிரே (Thunder Grey) நிறங்களில் இந்த சாம்சங் போனை வாங்க முடியும்.
6000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த போன். பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதி உள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.13,499 விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








